நைட் 10 மணிக்கு மேல இந்த பிரச்சனைகளை சந்திச்சா.. அசால்ட்டா இருக்காதீங்க.. சிறுநீரக நோயின் அறிகுறியா இருக்கலாம்

admin
By -
0

 Kidney Damage Symptoms At Night: மனித உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்பாகும். ஏனெனில் சிறுநீரகங்கள் நமது உடலில் இருந்து கழிவுகள் மற்றும் கூடுதல் திரவங்களை வெளியேற்றுகின்றன. மேலும் சிறுநீரகங்கள் உடலின் செல்களால் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தை நீக்கி, இரத்தத்தில் சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற கனிமச்சத்துக்கள், நீர் மற்றும் உப்புக்களை சமநிலையில் பராமரிக்கின்றன.

இப்படிப்பட்ட சிறுநீரகங்கள் தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டு, ஒருகட்டத்தில் சிறுநீரகங்களின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இது தவிர சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால நிலைமைகளுக்கு எடுக்கும் மருந்துகளாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம். சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சரியாக சிகிச்சை அளித்து, குணமாக்கலாம்.

Kidney Damage Signs Warning Symptoms Of Kidney Damage At Night In Tamil

ஒருவரது சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் பெரும்பாலும் இரவு நேரத்தில் அதிகம் தெரியும். இப்போது சிறுநீரகங்களில் சேதம் ஏற்பட்டிருந்தால் இரவு நேரத்தில் வெளிப்படும் சில முக்கியமான மற்றும் கவனிக்க வேண்டிய அறிகுறிகளைக் காண்போம்.

அடிக்கடி இரவில் சிறுநீர் கழிப்பது

சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் தெரியக்கூடிய பொதுவான அறிகுறிகளில் ஒன்று அடிக்கடி சிறுநீர் கழிப்பது. அதுவும் இரவு நேரத்தில் தூக்கத்தை கெடுக்கும் வகையில், அடிக்கடி சிறுநீரை கழிக்க எழ வேண்டியிருக்கும். இப்படி இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், ஒருவரது தூக்கம் பாழாகி, அதன் விளைவாக பகல் வேளையில் மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும். எனவே இரவு நேரத்தில் தூக்கம் கெடும் அளவில் அடிக்கடி சிறுநீர் கழித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

கால், முகம் மற்றும் கை வீக்கம்

சிறுநீரக பாதிப்பின் மற்றொரு முக்கியமான அறிகுறி கை, கால்கள் மற்றும் முகத்தில் வீக்கத்தை சந்திப்பது. எப்போது ஒருவரது உடலில் இருந்து அதிகப்படியான நீரை சிறுநீரகங்களால் வடிகட்ட முடியாமல் போகிறதோ, அப்போது தான் ஒருவரது உடலில் இப்படி வீக்கம் ஏற்படுகிறது. அதுவும் இப்படியான வீக்கத்தை ஒருவர் தினமும் சந்தித்து வந்தால், குறிப்பாக இரவு நேரத்தில் சந்தித்து வந்தால், அசால்ட்டாக விடாதீர்கள்.

அடர் மஞ்சள் நிற சிறுநீர்

கழிக்கும் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில் ஒருவரது சிறுநீர் அந்நபரின் ஆரோக்கியத்தைப் பற்றி தெரியப்படுத்தும். அதனால் தான் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறுநீர் சோதனை செய்யப்படுகிறது. அதுவும் ஒருவரது சிறுநீர் வழக்கத்திற்கு மாறாக பல நாட்களாக மஞ்சுள் நிறத்தில் வெளிவந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பாருங்கள்.

மிகுந்த உடல் சோர்வு

சிறுநீரகங்களில் சேதம் ஏற்பட்டிருந்தால், அது உடலில் நச்சுக்களை அதிகம் தேங்க செய்து, அதன் விளைவாக உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்றவற்றை சந்திக்க வைக்கும். குறிப்பாக இப்படியான உடல் சோர்வு இரவு வேளையில் மிகுதியாக இருக்கும். மேலும் பகல் வேளையில் தினசரி வேலைகளை செய்ய முடியாமல் அவதிப்பட வைக்கும். எனவே இந்த அறிகுறியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

சுவாசிப்பதில் சிரமம்

இரவு நேரத்தில் சுவாசிப்பதில் சிரமப்பட்டால், அது நுரையீரல் பிரச்சனை மட்டுமின்றி, சிறுநீரக பாதிப்பின் மற்றொரு அறிகுறியாகும். சிறுநீரகங்களால் அதிகப்படியான திரவத்தை வெளியேற்ற முடியாமல் போகும் போது, அதன் விளைவாக நுரையீரலில் திரவம் குவிந்து, அது சுவாசிப்பதில் சிரமத்தை உண்டாக்கலாம். எனவே பல நாட்களாக இரவு வேளையில் இப்படியான அறிகுறியை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Post a Comment

0Comments

Post a Comment (0)