ஆண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினை என்றால் அது அவர்களின் திருமண வாழ்க்கையில் மூன்றாவதாக ஒருவர் நுழைவதுதான். எந்த ஒரு ஆணாலும் அவர்களின் மனைவியோ அல்லது காதலியோ பிறரை நேசிப்பதை தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் சிலருக்கு அது நடக்கும். இதில் மிகவும் துரதிர்ஷ்டமான விஷயம் என்னவெனில் பலர் இதை மிகவும் தாமதமாகவே அறிவார்கள்.
பல ஆண்களால் அதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய முடியாது, ஆனால் காதலியின் நடத்தை மற்றும் குணாதிசயங்களில் சில மாற்றங்கள் மூலம் அதைக் கண்டறிய முடியும். ஏனென்றால் இன்னொருவர் மீதான காதல் அவர்களில் பழக்கவழக்கங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் காதலி அல்லது மனைவி வேறொருவர் மீது ஈர்ப்பு கொண்டிருப்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கத்திற்கு மாறாக ரகசியம் காப்பது
அவர்கள் புதிதாக நிறைய விஷயங்களை மறைப்பது அல்லது அசாதாரணமான முறையில் போனை உபயோகிப்பது முக்கியமான அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக அவர்கள் போன் மற்றும் சமூக ஊடக கணக்குகளை மறைப்பது அல்லது அடிக்கடி பாஸ்வேர்டுகளை மாற்றுவது மற்றும் அவர்கள் செல்போனின் திரையை எப்போதும் கீழ்நோக்கி வைத்திருப்பது அவர்களுக்கு புதிய தொடர்பு இருப்பதற்கான அறிகுறியாகும்.
தயாராக அதிக மெனக்கெடுவது
வழக்கத்திற்கு மாறாக வெளியே கிளம்புவதற்கு அதிக நேரம் செலவழிப்பதும், அழகான ஆடைகள் மற்றும் நகைகள் அணிவதில் அதிக கவனம் செலுத்துவதும் அவர்கள் மனதில் வேறொருவர் இருப்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். அவர்கள் ஆடைகளில் அதிக கவனம் செலுத்துவது, இதுவரை அணியாத ஆடைகளை முயற்சிப்பது அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாகவும் இருக்கலாம்.

பேசுவதற்கு தயக்கம்
பேசுவதற்குத் தயக்கம், அன்பை வெளிப்படுத்தத் தயக்கம், மெசேஜ் அல்லது தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காமல் இருப்பது, கடந்த காலகளைப் போலல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக நடந்து கொள்வது, இன்னொருவர் மீது அவர்கள் ஈர்ப்பு கொண்டிருப்பதன் பிரதிபலிப்பாக இருக்கலாம். கேள்விகளுக்கு கவனக்குறைவாகவும் சோம்பேறித்தனமாகவும் பதில் சொல்வதும் அவர்கள் உங்கள் மீது வெறுப்புடன் இருப்பதற்கான அறிகுறியாகும்.
உங்களிடமிருந்து தூரமாக செல்வது
உங்களிடமிருந்து வேண்டுமென்றே ஒதுங்கி இருத்தல், நெருக்கமாக இருப்பதில் ஆர்வமின்மை மற்றும் ஒன்றாக நேரத்தை செலவிட தயக்கம் ஆகியவை உங்கள் மீதான ஆர்வ இழப்பின் அறிகுறியாக இருக்கலாம். உணர்ச்சிப்பூர்வமான நெருக்கம் இல்லாமை, மனம் திறந்து பேசத் தயக்கம் இவையெல்லாம் அவர்களின் கவனம் வேறொருவர் மீது இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
இன்னொருவரைப் பற்றி அதிகம் பேசுவது
புதிதாக ஒரு நபரைப் பற்றி தொடர்ந்து பேசுவது, அவர்களைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்வது, அவர்களின் சிறப்புகளை பற்றி பேசுவது மற்றும் தேவையில்லாமல் அவர்களின் செயல்களை நியாயப்படுத்துவது அவர்கள் மீதுள்ள நேசத்தின் அடையாளமாகும். குறிப்பாக அவர் உங்களுக்கு இதுவரை தெரியாத ஒருவராக இருக்கலாம்.
புதிய விஷயங்களைப் பெறுவது
கடந்த காலங்களில் புறக்கணித்த ஒன்றை திடீரென விரும்புவதும், அதற்காக நேரத்தைச் செலவிடுவதும் அவர்கள் புதிதாக ஒருவர் மீது ஆர்வம் கொள்வதற்கான அறிகுறியாக இருக்கலாம். புதிய பொழுதுபோக்குகள் மற்றும் உணவு ஆர்வங்கள் அனைத்தும் அவர்களின் சுவைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள முயற்சிப்பதற்கான வெளிப்பாடாக இருக்கலாம்.