இந்த 5 வகை பெண்கள் காதல்/திருமணத்தில் நேர்மையில்லாதவராக இருப்பார்களாம்... அவர்கள் ஈஸியா துரோகம் பண்ணிருவாங்க!

admin
By -
0

 ஒரு காதலைக் அழிக்கும் மிகவும் முக்கியமான விஷயம் நம்பிக்கை துரோகம்தான். இந்த துரோகம் வாழ்க்கையில் ஒருவர் சந்திக்கக் கூடிய மிக மோசமான நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கலாம். இது அதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த அனைத்து மகிழ்ச்சியான தருணத்தையும் அழித்துவிடும். காதலில் நடக்கும் துரோகங்களை விட திருமண உறவில் நடக்கும் துரோகம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

துரோகம் என்பது ஆண், பெண் என பாலினத்தைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு உறவிலும் நிகழக்கூடிய ஒரு மோசமான பிரச்சினையாகும். சில ஆளுமைப் பண்புகள், வாழ்க்கைச் சூழ்நிலைகள் மற்றும் உறவின் இயக்கவியல் ஆகியவை பெண்களிடையே துரோகத்தின் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இந்த பதிவில் உறவு அல்லது திருமணத்தில் எந்தெந்த பெண்கள் ஏமாற்றுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Types of Women Who Are Likely to Cheat in a Relationship in Tamil

எந்த விஷயத்திலும் திருப்தி அடையாத பெண்

உங்கள் காதலி/மனைவி தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்தினால் அவர்கள் துரோகம் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் பரிசுகள், நேரம் அல்லது உணர்ச்சிரீதியான ஆதரவு, காதல் என எதிலும் அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். அதுபோன்ற சூழலில் அவர்கள் அதை வேறொரு இடத்தில் திருப்தியை தேடத் தொடங்குவார்கள். தங்கள் துணையின் அன்பு, கவனிப்பு மற்றும் ஆதரவைப் பாராட்டாத பெண்கள் உறவில் துரோகம் ஏற்படும் அபாயம் மிகவும் அதிகம்.

எல்லைகள் இல்லாத பொறுப்பில்லாமல் வாழும் பெண்கள்

ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கென ஒரு எல்லை இருக்க வேண்டும். அதிலும் உறவில் இருக்கும் போது அந்த எல்லைகள் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். உறவில் இருப்பதை பொருட்படுத்தாமல் எல்லைகளின்றி தங்கள் விருப்பம் போல வாழும் பெண்கள் துரோகம் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. பொறுப்பற்ற நடத்தையில் ஈடுபடும் பெண், உறவில் நம்பகத்தன்மையுடன் இருக்க மிகவும் போராடலாம், இது இறுதியில் துரோகத்திற்கு வழிவகுக்கும்.

Types of Women Who Are Likely to Cheat in a Relationship in Tamil

ஏற்கனவே ஒருமுறை ஏமாற்றிய பெண்

காதலில் ஏமாற்றுவது என்பது ஒருபோதும் தன்னிச்சையாக நிகழ்வதில்லை. அது அவர்களின் விருப்பத்துடனேயே ஏற்படுகிறது. ஒருமுறை ஏமாற்றிய பெண்ணுக்கு அது வழக்கமானதாக மாற அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஏமாற்றிய மற்றும் அதனால் எந்த விளைவுகளையும் சந்திக்காத ஒரு நபர் உறவில் இந்த நடத்தையை மீண்டும் செய்ய அதிக வாய்ப்புள்ளது.

த்ரில்லிங்கை விரும்பும் பெண்

த்ரில்லிங் மற்றும் அடிக்சன் ஒரு நபரை அவர்களின் திருமணத்திற்கு வெளியே மனநிறைவைத் தேட வைக்கத்தூண்டும். அட்ரினலின் சுரப்பை விரும்பும் பெண்கள் அதை அடிக்கடி பெறுவதற்கான துரோகத்தில் ஈடுபட வைக்கும், அவர்கள் வாழும் போரடிக்கும் உலகிலிருந்து தப்பிக்கும் ஒரு வடிவமாக துரோகத்தில் ஈடுபடுவார்கள்.

பாலியல் உறவில் வித்தியாசமான கண்ணோட்டதைக் கொண்ட பெண்

ஒருதார மணத்தை நம்பாத அல்லது துணையை ஏமாற்றுவது பெரிய குற்றமல்ல என்று கருதும் பெண்கள் உறவில் துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பாலியல் ஆசைகள் குறித்த அவர்களின் வித்தியாசமான கண்ணோட்டம் உறுதியான உறவில் கூட நடத்தையை மாற்றி வேறொருவரை நாட வைக்கும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)