Skin Care Tips In Tamil: ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான சரும வகையைக் கொண்டிருப்போம். அதில் சிலருக்கு சருமம் அதிகம் வறண்டு இருக்கும், இன்னும் சிலருக்கு எண்ணெய் பசையுடனோ, இன்னும் சிலருக்கு இரண்டும் கலந்தோ இருக்கும். இதில் ஒவ்வொரு சருமத்தினரும் ஒவ்வொருவிதமான சரும பிரச்சனையால் அவதிப்படுவார்கள். அதுவும் எண்ணெய் பசை சருமத்தினரை எடுத்துக் கொண்டால், முகப்பருவால் அதிகம் சிரமப்படுவார்கள்.
முகப்பருவானது வலிமிக்கது மட்டுமின்றி, ஒருவரது அழகை கெடுக்கும். இப்படி முகத்தில் பருக்கள் வர அதிகப்படியான எண்ணெய்ப்பசை ஒரு காரணமாக இருப்பதால், இந்த எண்ணெய் பசையை நீக்க ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வரலாம். அதுவும் இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடும் போது, முகப்பருக்கள் தடுக்கப்படுவதோடு, முகமும் பொலிவோடு இருக்கும். இப்போது முகப்பருவைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.

1. அவகேடோ மற்றும் வைட்டமின் ஈ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு அவகேடோ பழத்தின் சதைப் பகுதியை சிறிது எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை மைல்டு கிளென்சர் கொண்டு கழுவி, பின் கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
2. தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தக்காளி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தை நீரில் கழுவி விட்டு, தயாரித்து வைத்துள்ளதை முகத்தில்
தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ
வேண்டும்.
3. தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/2 கப் கெட்டி தயிரை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் முகத்தை நீரில் கழுவி விட்டு, கலந்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தி வர முகம் பொலிவோடு பளிச்சென்றும் பருக்களின்றியும் இருக்கும்.
4. வெள்ளரிக்காய் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் வெள்ளரிக்காயை சிறிது எடுத்து அரைத்து, ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு முகத்தைக் கழுவி விட்டு, தயாரித்து வைத்துள்ளதை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி விட்டு, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)